+/- குத்து, பின்னூட்டம், பதிவுத்தலைப்பு - Jolly Tips
************************
தமிழ்மணம் '+/-' ரேட்டிங் வசதியை வழங்கியது, பதிவர்கள் வாசிக்கத்தக்க பதிவுகளை பரிந்துரைப்பதற்காக என்பது என் எண்ணம். ஆனால், அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது ? தங்களுக்கு ஒவ்வாத கருத்துக்கள் உடைய பதிவுகளுக்கு '-' போட்டு, அப்பதிவுகள் பரிந்துரைக்கப்பட்ட பதிவுகள் பட்டியலில் வராமல் பார்த்துக் கொள்வதில் போய் முடிகிறது !!! பதிவரின் கருத்துக்கள் விவாதத்திற்குரியவை என்றால், தங்களது எதிர்கருத்துக்களை பின்னூட்டமாக இடலாமே ! ஜனநாயகத்தில் விவாதம் அவசியமானது இல்லையா ? அதை விடுத்து "-" போட்டுத் தாக்குவது சரியில்லை.
தனிமனிதத் தாக்குதல் / வசைகள் / அருவருக்கத்தக்க கருத்துக்கள் கொண்ட பதிவுகளுக்கு, வாசகர் கண்டிப்பாக '-' இட்டு, கண்டனத்தை தெரிவித்தால் நல்லது. அத்தகைய பதிவுகளை பின்னுட்டமிடாமல் நிராகரித்தாலே போதும். பதிவர் புரிந்து கொள்வார் என்று நினைக்கிறேன் ! ஊக்கமளிப்பதால் தான் பிரச்சினைகள் பூதாகரமாகின்றன.
புதிதாக வரும் பதிவர்களுக்கு பின்னூட்டமிட்டு அவர்களைஊக்குவிக்கலாம். அவர்கள் மேலும் சிறப்பாக எழுத அது உதவும்.
சீரியஸ் மேட்டர் முடிந்தது, இப்ப கொஞ்சம் ஜாலியா சில கருத்துக்கள் :)
1. ஒரு பதிவை படிச்சுட்டு, ஒண்ணுமே தோணலன்னா, பதிவை மறுபடியும் வாசியுங்கள், ஏதாவது உள்குத்து இருந்தா புரிய வாய்ப்பிருக்கு ! பதிவின் தலைப்பை நன்றாக உள்வாங்கிக் கொள்ளுங்கள் ! அப்படியும் புரியலன்னா, நீங்க ஒரு வெண்குழல் விளக்கு தான் :) அல்லது வலைப்பதிவுலகம் பற்றி சரியா இன்னும் தெளியலேன்னு அர்த்தம் ! தெரிந்தோ தெரியாமலோ, சக வலைப்பதிவர் ஏதாவது சொல்லி ஏடாகூடமாக மாட்டினார்னா, உடனே அவரை "இது நியாயமா, தர்மமா, அடுக்குமா?" என்று கேள்வி கேட்டு ஒரு பதிவு போடுங்கள் ! உடனே, பதிவைச் சுத்தி கூட்டம் அம்மும் :) இது தான், இப்ப லேட்டஸ்ட் டிரெண்ட் ;-)
2. உங்களோட கூட்டாளியோட பதிவாயிருந்தால், "சூப்பர் மாமூ" அல்லது "கலக்கிட்டியே சந்துரு" என்று போட்டு கீழே "நமீதா ரசிகர் மன்றம்" அல்லது "சிம்ரன் ஆப்பக்கடை, துபாய்" (பதிவுக்கு சம்பந்தமா என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை!) என்று குறிப்பிடுங்கள்.அலம்பல் செய்வதற்கென்றே அலைந்து கொண்டிருக்கும் அனானிக் கூட்டம் will take over :) "நீ உருப்பட மாட்டே", "நீ மட்டும் உருப்படுவியா?", "நான் உருப்பட்டாலும், நீ உருப்படவே மாட்டே", என்று பலவிதமான பெயர்களில் (தலையெழுத்துப் பிழை, சனீஸ்வர குய்ராலா, நாதாரி, கபோதி, சொர்ணமால்யா, புலிகேசி ....) அனானிகள் தொடர்ந்து பின்னூட்டி, உங்கள் பதிவு, "அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" பகுதியில் டாப்பில் இருக்குமாறு பார்த்துக் கொள்வர் ;-)
3. பதிவின் தலைப்பில், வள்வள், கழிவு, கேவலம், ஜொள்ளு, கருப்பு, பாப்பான், போலி, டோண்டு போன்ற சொற்கள் இருந்தா, வாசகரை சும்மா காந்தம் மாதிரி பதிவு பக்கம் இழுக்கலாம் ;-) நெறய பின்னூட்டங்களும் கிடைக்கும், பிளாக் கவுண்டர் (Blog counter) வச்சிருந்தா பிச்சுக்கிட்டு ஓடும்
!!!
4. பின்னூட்டக் கயமைத்தனம் நெறய செய்யுங்கள் : அதான், 'நன்றி', 'மறுபடியும் நன்றி', 'ஆ, சொல்ல மறந்துருச்சு', 'வாங்க, வாங்க' போன்றவை !!! ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் தனித்தனியா (டைம் கேப் விட்டு) நன்றி சொல்லுங்க ! அதே மாதிரி, டைம் கேப் விட்டு, உங்களுக்கு வந்த பின்னூட்டங்களை ஒவ்வொண்ணா பப்ளிஷ் பண்ணனும், புரியுதா ??? அப்ப தான், மறுமொழியப்பட்ட ஆக்கங்கள் பகுதியை நீங்க ஆதிக்கம் பண்ணலாம் ;-)
5. நடுநிலையோடு ஒரு பிரச்சினையின் இரு பக்கங்களையும் ஆய்ந்து, மறந்தும் கூட ஒரு பதிவு போட்டு விடாதீர்கள். அதே போல், எதிராளி சொல்வதில் ஏதாவது சங்கதி உள்ளதா என்றெல்லாம் பார்த்து டைம் வேஸ்ட் செய்யாதீங்க ! Chances are, உங்களை யாரும் சீந்த மாட்டார்கள் !!! ஒரு பக்கத்தை பிடித்துக் கொண்டு தொங்குவது தான் உங்களுக்கு celebrity status தரும் ;-)
6. மேலே சொன்னவை எதுவும் (அதிக பின்னூட்டங்கள் பெற!) வொர்க் அவுட் ஆகலேன்னா, நேரா டோண்டுவின் ஏதாவது ஒரு பதிவுக்குப் போய் 'நல்ல பதிவு' ன்னு மட்டும் கமெண்ட் போடுங்க, அவ்வளவு தான், நீங்களே நினைச்சு பார்க்காத அளவுக்கு, டோண்டுவின் 'நெருங்கிய நண்பர்' உங்களுடைய எல்லா பதிவுகளிலும், பின்னூட்ட மழை பொழிவார் ;-) வாழ்த்தி, நெறய தனிமடல்களும் அனுப்புவார் :)
இந்த பதிவுக்கு, + அல்லது -, ஏதோ ஒண்ணு குத்துங்க, ஒங்க இஷ்டப்படி :)
என்ன, ஜோதியிலே ஐக்கியமாகத் தான் இந்த பதிவே :)
என்றென்றும் அன்புடன்
பாலா
***********************************
20 மறுமொழிகள்:
//வெண்குழல் விளக்கு//
ஒரு சீரியஸ் கேள்வி !
வெண்குழல் விளக்கு அப்படின்னா என்ன ?
அடப் பாவமே! உங்களுக்கும் இதே நிலைமையா?
:(
அதிக பின்னூட்டம் பெறுவது எப்படின்னு இதுவரைக்கும் இரண்டு பேர் எழுதிருக்காங்க(டோண்டு,குமரன்).அந்த இரு பதிவுகளும் அதிக பின்னூட்டம் பெற்று சாதனை புரிந்தது.இப்ப நீங்க மூணாவதா ஐடியா குடுத்துருக்கீங்க.இதுவும் அதிக பின்னூட்டம் பெற என் வாழ்த்துக்கள்.
(இந்த பின்னூட்டத்துக்கு நன்றி சிறிது நேரம் கழித்து சொல்லணும்:))))
செல்வன்,
நன்றிங்க ! ஏதோ ஜாலியா எழுதணும்னு தோணிச்சு, வலைப்பதிவுலகம் கொஞ்சம் சூடா இருந்த மாதிரி பட்டுது, அதான் :)
என்றென்றும் அன்புடன்
பாலா
//(இந்த பின்னூட்டத்துக்கு நன்றி சிறிது நேரம் கழித்து சொல்லணும்:))))
//
ஆஹா, உடனே சொல்லிப்புட்டேனே !!!
கோவி கண்ணன்,
//ஒரு சீரியஸ் கேள்வி !
வெண்குழல் விளக்கு அப்படின்னா என்ன ?
//
இதெல்லாம் ரொம்ப டூ மச் ங்க :)
உங்களுக்கே 'டியூப் லைட்' தெரியலேன்னா எப்படி ? ;-)
நீங்களும் மகியும் ஒரு பதிவுலே அடிச்ச லூட்டி தாங்க இப்பதிவுக்கு Inspiration !!!
என்றென்றும் அன்புடன்
பாலா
நாமக்கல் சிபி,
//அடப் பாவமே! உங்களுக்கும் இதே நிலைமையா?
//
ஏங்க, நானும் உங்களில் ஒருவன் தானே ;-)
அதான் சொன்னேனே, ஜோதியிலே ஐக்கியமாகற முடிவில தான் :)
என்றென்றும் அன்புடன்
பாலா
நேரா டோண்டுவின் ஏதாவது ஒரு பதிவுக்குப் போய் 'நல்ல பதிவு' ன்னு மட்டும் கமெண்ட் போடுங்க, அவ்வளவு தான், நீங்களே நினைச்சு பார்க்காத அளவுக்கு, டோண்டுவின் 'நெருங்கிய நண்பர்' உங்களுடைய எல்லா பதிவுகளிலும், பின்னூட்ட மழை பொழிவார் ;-) வாழ்த்தி, நெறய தனிமடல்களும் அனுப்புவார் :)//
நல்ல பதிவு!
-அடுத்தாத்து அலம்(பு)மு
"மேலே சொன்னவை எதுவும் (அதிக பின்னூட்டங்கள் பெற!) வொர்க் அவுட் ஆகலேன்னா, நேரா டோண்டுவின் ஏதாவது ஒரு பதிவுக்குப் போய் 'நல்ல பதிவு' ன்னு மட்டும் கமெண்ட் போடுங்க, அவ்வளவு தான், நீங்களே நினைச்சு பார்க்காத அளவுக்கு, டோண்டுவின் 'நெருங்கிய நண்பர்' உங்களுடைய எல்லா பதிவுகளிலும், பின்னூட்ட மழை பொழிவார் ;-) வாழ்த்தி, நெறய தனிமடல்களும் அனுப்புவார் :)"
:))))))))))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
//உங்களுக்கே 'டியூப் லைட்' தெரியலேன்னா எப்படி ? ;-)//
எ.அ.பா...!
ஒரு சிரிப்பானைத் தட்டிவிட்டால் முடிந்திருக்க வேண்டிய மறுமொழிக்கு பதிலாக சீரியசாக 'ட்யூப் லைட்'டுக்கு விளக்கம் கொடுத்து தாங்கள் ஒரு அப்பாவி என்று விளங்க வைத்துவிட்டீர்கள்
:)))))))
//நீங்களும் மகியும் ஒரு பதிவுலே அடிச்ச லூட்டி தாங்க இப்பதிவுக்கு Inspiration !!!
என்றென்றும் அன்புடன்
பாலா //
பார்த்தேன் ... ரசித்தேன் ... சிரித்தேன் ...
ஒன்னும் சீரியஸ் கீரியஸ் ஆக லூட்டி அடிக்கலையே... காமடித்தானே பண்ணினோம் !
:))))
நான் கண்டுபிடித்த "பின்னூட்ட கயமைத்தனம்" என்ற பதத்தை பிரபலமாக்குபவர்களுக்கு நன்றி.... குறிப்பாக பின்னூட்ட கயமைக் கண்காணிப்புக் குழு போலிஸ்காரருக்கு ரொம்பவும் நன்றி!!!!
அனானியாக அமர்க்களம் செய்வது நோண்டு மட்டுமே. மேலே இருக்கும் அனானி கமெண்டு ஒன்றையும் அதுக்கு கீழே இருக்கும் நோண்டு கமெண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
வயதாக ஆக சில பேருக்கு புத்தி தடுமாறுகிறது.
:-)))))))
//அதே மாதிரி, டைம் கேப் விட்டு, உங்களுக்கு வந்த பின்னூட்டங்களை ஒவ்வொண்ணா பப்ளிஷ் பண்ணனும், புரியுதா ???//
பப்ளிஷ் பண்ணா மட்டும் பத்தாது.. உங்க பக்கத்தை இன்னோரு முறை நீங்களே பாத்துக்கனும்... இல்லைன்னா "அன்மையில் மறுமொழியப்பட்ட பதிவுகள்"ல வராது.
கோவி கண்ணன்,
//ஒரு சிரிப்பானைத் தட்டிவிட்டால் முடிந்திருக்க வேண்டிய மறுமொழிக்கு பதிலாக சீரியசாக 'ட்யூப் லைட்'டுக்கு விளக்கம் கொடுத்து தாங்கள் ஒரு அப்பாவி என்று விளங்க வைத்துவிட்டீர்கள்
//
உங்களுக்கு தெரியும்னு எனக்கும் தெரியும், நான் ஒண்ணும் அவ்வளவு அப்பாவியில்ல, தல ;-) நன்றி.
CT,
Thanks for your comments.
//P.S I never know about this + and _
//
Below the post title, you can see two palms, one with thumbs up (+) and the other with thumbs down (-). You need to click on any one of them to vote positive / negative for what is written in the post. Is this clear ?
Dondu Sir, Anony friend,
Thanks :)
நோண்டு,
நல்லா ஜோக் அடிக்கிறீங்க ;-) நன்றி.
லக்கி லுக், நன்றி :)
அன்பில் கோபி,
வாங்க, நலமா ? கருத்துக்கு நன்றி !
இங்கே நான் (ங்கள்)விளையாட அனுமதி உண்டா /
//இங்கே நான் (ங்கள்)விளையாட அனுமதி உண்டா /
//
Of course , Definitely :))))
:))))))
பாலா...
இந்த மாதிரி வெட்டி வேலை பார்க்க நிறைய பேர் இருக்கிறார்கள் (என்னை மாதிரி) :)) உருப்படியாக ஏதாவது எழுதுங்கள்...உங்கள் பாணியில்
//பாலா...
இந்த மாதிரி வெட்டி வேலை பார்க்க நிறைய பேர் இருக்கிறார்கள் (என்னை மாதிரி) :)) உருப்படியாக ஏதாவது எழுதுங்கள்...உங்கள் பாணியில்
Comment by Anonymous at 10:17 AM, August 27, 2006
//
அது என்ன பாணி ;-)
ரொம்ப சீரியஸாகவும் இருக்கக் கூடாதுன்னு தான், அப்பப்ப இப்படி :)
//மேலே சொன்னவை எதுவும் (அதிக பின்னூட்டங்கள் பெற!) வொர்க் அவுட் ஆகலேன்னா, நேரா டோண்டுவின் ஏதாவது ஒரு பதிவுக்குப் போய் 'நல்ல பதிவு' ன்னு மட்டும் கமெண்ட் போடுங்க, அவ்வளவு தான், நீங்களே நினைச்சு பார்க்காத அளவுக்கு, டோண்டுவின் 'நெருங்கிய நண்பர்' உங்களுடைய எல்லா பதிவுகளிலும், பின்னூட்ட மழை பொழிவார் ;-) வாழ்த்தி, நெறய தனிமடல்களும் அனுப்புவார்//
ஜோக்கடிக்குற வாக்கில் சிலர் வலைப்பூவில் டீம் போட்டு கூத்தடிக்கும் விஷயத்தை வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் நாசூக்காக கூறி சென்றுள்ளீர்கள். சத்தியத்தை இப்படியாவது வெளிகொணர்ந்த உமக்கு நன்றிகள்.
பிரகாசம்
பிரகாசம்,
வாங்க, கருத்துக்கு நன்றி !
Post a Comment